ஈரோடு, ஜூலை 4: ஈரோடு மாவட்ட சமூகநலத் துறை கட்டுபாட்டின் கீழ்செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் , தகவல் தொழிற்நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் ஆகிய 3 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரியான erode.nic.in ல் உரிய படிவம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.