காரிமங்கலம், ஆக.28: காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சித் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கவுன்சிலர்கள்ள சதீஷ்குமார், சுரேந்திரன், சிவகுமார், நாகம்மாள், சத்யா, ரமேஷ் இந்திராணி ராமச்சந்திரன், பிரியா சங்கர், கீதா முத்துச்செல்வம், ராதா ராஜா, ராஜம்மாள், கோவிந்தசாமி தலைமை எழுத்தர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரன் நன்றி கூறினார். பேரூராட்சி மன்ற கூட்டம்
previous post