திருச்செங்கோடு, நவ.22: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், வருகிற 24ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு, திருச்செங்கோடு-வேலூர் ரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நவம்பர் 27ம்தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
0
previous post