பாவூர்சத்திரம்,செப்.25: பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி பள்ளி மாணவர் சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிலம்பம் அகாடெமி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மாயமான் குறிச்சியிலுள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மேல்நிலைப்பள்ளியிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் கார்த்திகேயன் ஜூனியர் தனித்திறமை பிரிவில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், கோப்பையும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவரை தாளாளர் அந்தோனி சேவியர், முதல்வர் குணரேவதி, சீனியர் முதல்வர் இசக்கியம்மாள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர்.