திசையன்விளை, ஆக. 15: மாவட்ட அளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்தாட்ட போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் வைத்து கடந்த ஆக.9ம்தேதி தக்சன் சகோதயா குழுவினரால் மூன்று மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் 40 பள்ளிகளை சார்ந்த 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். 19 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் இடத்தை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளி வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குநர் சௌமியா, முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.