தஞ்சாவூர்: தூய்மை சேவை திட்டம், செப்டம்பர் 15.09.2023 முதல் இன்று வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி கூறுகையில், நேற்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக ஸ்டெம் பார்க், அருளானந்த நகர், தஞ்சாவூர் மற்றும் கல்கி பார்க், பழைய பேருந்து நிலையம், மன்னார்குடி ஆகிய பகுதிகள் தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், துணை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள், தபால் நிலைய அலுவலர்கள், அஞ்கல் எழுத்தர்கள், தபால்காரர்கள் மற்றும் பன்முகதிறன் ஊழியர்களால் மேற்கண்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் ஏற்பாடு மேயர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் அஞ்சல்துறை ஊழியர்கள் தூய்மைப்பணி
51