அரியலூர், மே 10: அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஊழியர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத் தலைமை வகித்தார். செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலர் பழனிவேல் தலைமை வகித்தார். இதேபோல் திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
83
previous post