மதுரை, ஆக. 26: மதுரை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி ஆலாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. என் உயிரினும் மேலான என்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் மாவட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன்,
இளைஞரணி துணை செயலாளர்கள் இன்பாரகு, ஜிபி ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெங்கடேசன், இளைஞரணி மாநகர் அமைப்பாளர் சவுந்திரராஜன், தெற்கு மாவட்ட அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் அன்புச்செல்வன், அய்யப்பன், ராமபிரசாத், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், துணை அமைப்பாளர்கள் மருதுராஜா, வெற்றிச்செல்வன், குமரேசன், வன்னிமுத்துப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.