போடி, அக். 17: தேனி மாவட்டம் போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் மேல் நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் தினவிழாவை முன்னிட்டு 2023- 2024 தேனி வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந் தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மூன்று நாள் போட்டியில் போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனூர், மயிலாடும்பாறை, கம்பம் உள்ளிட்ட 8 மண்டலம் அடங்கிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் இந்த மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
14, 17,19 ஆகிய ஜூனியர் ,சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இந்தப் போட்டியினை ஐ.கா.நி பள்ளிகளின் தலைவர் ராஜ கோ பால் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளிகளின் செயலாளர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வைத்தார். தொடர்ந்து மாவட்ட அளவில் 8 ம ண்டலங்களிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.