கிருஷ்ணகிரி, மே 24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடந்த 22ம் தேதி காலை வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி தகவல் இல்லாததால், பெற்றோர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல் பேரிகை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண். கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லாததால், பெற்றோரி பேரிகை போலீசில் புகார் செய்தனர். அதில் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முனிராஜ் (22) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த 2 புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் மாணவி உள்பட 2 பேர் மாயம்
0
previous post