ஊட்டி, ஜூலை 23: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் தேயிலை மற்றும் காலை காய்கறி மகசூல் அதிகரிப்பது வழக்கம்.
இம்முறை தென்ேமற்கு பருவமழை போக்குகாட்டி வந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஊட்டி, குந்தா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், மழையால் மலைபாங்கான பகுதகிளிலும் காய்கறி விவசாயம் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.