கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): ஊத்தங்கரையில்- 72.60, பாம்பாறு அணை- 62, கிருஷ்ணகிரி- 58, போச்சம்பள்ளி- 19.40, பாரூர்- 15, பெனுகொண்டாபுரம்- 7.30, கேஆர்பி டேம்- 4.60, நெடுங்கல்- 4.80, ஓசூர்- 3.50, அஞ்செட்டி- 2 என மொத்தம் 251 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பரவலாக மழை
previous post