நாமக்கல், ஜூன் 8: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வெப்பம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாலை நேரங்களில், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம், மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்தடை ஏற்பட்டது. கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): நாமக்கல்-51.30, கலெக்டர் அலுவலகம்-34, எருமப்பட்டி-20 மி.மீ., குமாரபாளையம்-25, மங்களபுரம்-4, மோகனூர்- 11, பரமத்திவேலூர்-33, புதுச்சத்திரம்-25, ராசிபுரம்- 27, சேந்தமங்கலம்- 65, திருச்செங்கோடு- 46.20, கொல்லிமலை- 59 மில்லிமீட்டர்.
மாவட்டத்தில் பரவலாக மழை
55
previous post