தர்மபுரி, மே 19: தர்மபுரி மாவட்டத்தில் அக்னிநட்சத்திரம் தொடங்கிய பின்னர், அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்துள்ளது. இதனால் பூமியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால், விவசாய நிலங்களில் மழை தேங்கியதால் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கோடை உழவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு விபரம் மில்லி மீட்டரில் : தர்மபுரி- 25, பென்னாகரம் -58, பாலக்கோடு – 28, பாப்பிரெட்டிப்பட்டி-54.40, அரூர் – 16, மாரண்டஅள்ளி -26, ஒகேனக்கல் – 123.60, மொரப்பூர் -4, நல்லம்பள்ளி – 4 மில்லி மீட்டர் என பரவலாக மழை பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாலையும் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது.