அரூர், மே 25: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சப்போட்டா அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட உள்ளது. கோடை தொடங்கிய முதலாக சப்போட்டா பழம் அறுவடை சீசன் துவங்கிவிட்டது. இதனால் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. அரூரில் சந்தை, பழக்கடைகள் மற்றும் மினி சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகளில் வைத்து சப்போட்டா பழங்களை வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகின்றனர். சாதாரண சப்போட்டா கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும், பால் சப்போட்டா கிலோ ரூ.40 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் சப்போட்டா அமோக விளைச்சல்
0
previous post