தேனி, ஜூலை 3: தேனி மாவட்டத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 22ம் தேதி வரை நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இம்முகாம் வருகிற 22ம் தேதி வரை நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டு இத்தகைய முகாம்கள் நடந்து வருவதாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது
0