லால்குடி, ஜூன் 26: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில், மாங்குளம் ஏரி என்ற குடிநீர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வருத்து வாய்க்கால் தூர்வாரப்படாத நிலையில், தற்போது பொறியியல் துறை மூலம் ஏரியின் வரத்து வாய்க்கால்கள் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரி கரையை பலப்படுத்துவது என திட்டமிடப்பட்டு அதற்கான தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைகண்ணன், வேளாண்மை பொறியியல்துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், ராமசாமி, ஊராட்சி செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.