சேலம், ஆக.30: சேலம் எருமாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி கவிதா(45). மாற்றுத்திறனாளி. கடந்த 24ம்தேதி காலை 11 மணியளவில் பால் வாங்குதவற்காக வீட்டின் கதவை சாத்தி வைத்துவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ திறந்திருந்தது. உள்ளே இருந்த 5 பவுன் தாலி செயின், ₹20 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காளிகவுண்டர்காட்டை சேர்ந்த பிரபல திருடன் பிரதாப்(36), வீடு புகுந்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 22 கிராம் நகையை மீட்டனர். மீதமுள்ள நகையை இன்னொருவரிடம் கொடுத்து விற்பனை செய்ய கூறியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் பிரதாப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.