ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘மாற்றுத்திறனாளி அடையாள அட்டை’ வழங்குவதற்கு சிறப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் பள்ளிகளில் நடைபெற உள்ளது. இம்முகாமில் உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு, அந்தந்த முகாம் நடக்கும் பள்ளியில் விபரங்கள் சேகரித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று 5ம் தேதி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், 6ம் தேதி தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, 10ம் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும், 11ம் தேதி டி.என்.பாளையம் பங்களாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12ம் தேதி பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், 13ம் தேதி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்க உள்ளது. 17ம் தேதி கோபி வேங்கம்மையார் நகராட்சி உயர்நிலை பள்ளி, 18ம் தேதி சென்னிமலை அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி சிங்கம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியிலும், 20ம் தேதி சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், 26ம் தேதி தாமரைக்கரை அரசு மேல்நிலை பள்ளியிலும், 27ம் தேதி கல்கடம்பூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.