ஏரல், நவ. 14: உமரிக்காட்டில் மாற்றுத்திறனாளிக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் இலவச 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. ஏரல் அருகேயுள்ள உமரிக்காடு அருகேயுள்ள ஆலடியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேது என்ற முத்துராமலிங்கம் (62). மாற்றுத்திறனாளியான இவர், 3 சக்கர சைக்கிள் இல்லாமல் அவதிபட்டு வந்தார். இதையறிந்த உமரிக்காடு பஞ். தலைவர் ராஜேஷ்குமார், இவருக்கு உதவி செய்யும் வகையில் ஆறுமுகநேரி சாகுபுரம் லயன்ஸ் கிளப்பை தொடர்பு கொண்டு உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து லயன்ஸ் கிளப் சார்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த இலவச சைக்கிளை உமரிக்காடு பஞ். தலைவர் ராஜேஷ்குமார், மாற்றுத்திறனாளி முத்துராமலிங்கத்திடம் வழங்கினார். அப்போது சமூக ஆர்வலர்கள் ராகவன், ஆதிராஜ், விஜய பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்
0