கூடலூர், ஜூன் 26: ரோட்டரி கிளப் ஆப் கூடலூர் சார்பில் சளிவயல் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பிதாப் (26) என்பவருக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, தேவாலய பங்குத்தந்தை குரியன் புள்ளிபாரா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ராஜகோபால், சாய்மோன், வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.