திண்டுக்கல், ஜூன் 4: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். துணை தலைவர் ஆறுமுகவள்ளி, துணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, கந்தசாமி, ஸ்டாலின், கருப்புச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் உடல் ஊனத்தின் தன்மையை சரியாக மதிப்பீடு செய்யாமல் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மருத்துவர்களை கண்டித்து கோஷமிட்டன். இதில் 50க்கும மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
0