அரூர், அக்.17: அரூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமினை அரூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவர், ஆர்த்தோ, பிசியோதெரபி, உடலியக்க குறைபாடு உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை பெற்று வழங்க ஆவணம் செய்யப்பட்டது. இதில் 75 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.