குளச்சல், மே 25: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மார்த்தாண்டம் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் அருட்தந்தை சதீஷ் குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் லெனின் பிரெட் முன்னிலை வகித்தார். கல்லூரி ஐகியுஏசி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பென்செவார்ட்ஸ் வரவேற்றார். இதில் ஐ.ஆர்.இ.எல் முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலை தலைவர் செல்வராஜன் மாணவ, மாணவிகளிடம் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார். கருத்தரங்கில் பொறியியல் பயிலும் மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மார் எப்ரேம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
0