மார்த்தாண்டம், ஜூன் 26: மார்த்தாண்டம் போலீசார் மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ஒரு வாலிபர் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அந்த நபர் பளுகல் அருகே கைக்குழிவிளாகம் பகுதியை சேர்ந்த 37 வயதான கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். ஆனாலும் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இவருக்கு திருட்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து சென்று மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.