மார்த்தாண்டம், ஆக.22: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திக்குறிச்சி ஆசாரிகுடிவிளையை சேர்ந்தவர் ஜா (32). கடந்த 19ம் தேதி தனக்கு சொந்தமான ஒரு சவரன் தங்க நகையை பீரோவில் வைத்துவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது யாரோ நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நகையை திக்குறிச்சி பனவிளை பகுதியைச் சேர்ந்த சுகந்தி (57) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சுகந்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மார்த்தாண்டம் அருகே நகை திருடிய பெண் கைது
previous post