மார்த்தாண்டம், ஆக. 4: புதுக்கடை அருகே ஓச்சவிளை புதுவீட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்ரோஸ். இவரது மனைவி பிரசன்னா. (50). இவர் நேற்று முன்தினம் காலை திருவட்டார் கோயிலுக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். உண்ணாமலைக்கடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் பிரசன்னா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசன்னா படுகாயமடைந்தார். அவரை காரில் வந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே கார் மோதி பெண் படுகாயம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மாயமானவர்கள் யார்?
previous post