மர்த்தாண்டம், ஜூன் 3: மார்த்தாண்டம் அரசு மாதவ விலாசம் நடுநிலைப் பள்ளியின் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பு விழா நடந்தது. விழாவில் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி, கல்வியாளர்கள், கவுன்சிலர்கள் ரத்தினமணி, சர்தார்ஷா, ரோஸ்லட்ஸ், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவில் மாணவர்களுக்கு பொன் ஆசைத்தம்பி இலவச பாடநூல்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கினார். கவுன்சிலர் ரத்தினமணி இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். சர்தார்ஷா இலவச சீருடைகளை வழங்கினார். விழா முடிவில் கவுன்சிலர் ரோஸ்லட் இனிப்பு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
மார்த்தாண்டம் அரசு மாதவ விலாசம் பள்ளி திறப்பு விழா
0
previous post