மார்த்தாண்டம், செப். 14: மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தலைமை வகித்தார். குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி 173 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் பிரபின் ராஜா, பள்ளி ஆசிரியைகள் கிறிஸ்டல் லீலாபாய், லதா, மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.