மார்த்தாண்டம், ஜூலை 1: மார்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனிமவளம் ஏற்றி செல்லும் கனரக லாரிகள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. செல்லசாமி மற்றும் போலீசார் மெயின் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகருக்குள் வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டத்தில் விதிமுறைகளை மீறிய 2 லாரிகள் பறிமுதல்
0