மார்த்தாண்டம், ஜூன் 6: ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மர்த்தாண்டம் பஸ்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: 2014 முதல் பிஜேபி ஆட்சி செய்கிறது. பிஜேபி தன்னுடைய ஆட்சி காலத்தில் 35 லட்சம் கோடி ரூபாய் பெரிய நிறுவனங்களுக்கு வரிசலுகை என்ற பெயரில், கடன் தள்ளுபடி என்ற பெயரில், இறக்குமதி சலுகை என்ற பெயரில் இலவசமாக வழங்கியிருக்கிறது. மறுபக்கத்தில் அரசு திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறி பொதுத்துறை நிறுவனங்களை தனியார்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்கிறது. முதலாளிகளுக்கு தானமாக வழங்கிய 35 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசு வசூல் செய்ய வேண்டும். அந்த பணத்தை கொண்டு இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைத்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் மேரி ஸ்டெல்லா தனபால் இசக்கி முத்து பரமேஸ்வரன் லாயம் சுசீலா முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
0
previous post