மார்த்தாண்டம், மே 20: மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமணையில் புகுந்து ரகளை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டத்தில் உள்ள மெயின் ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு வள்ளவிளையை சேர்ந்த சாம் மற்றும் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வரவேற்பில் இருந்த ஊழியரிடம் சூர்யா என்பவருடைய மருத்துவ அறிக்கை தரக்கோரி தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது இதனை பார்த்து வந்த மற்றொரு பெண் ஊழியரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து மருத்துவமனையின் மேலாளர் தினகர் (40) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சாம் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் ரகளை செய்த 3 பேர் மீது வழக்கு
0
previous post