மார்த்தாண்டம், மே 29: மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீசார் பயணம் குஞ்சுவீட்டுவிளை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1,500 ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் செல்வராஜ் (56) என்பவரை கைது செய்தனர்.