சென்னை: மார்ச் 4,5-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. …