ராயக்கோட்டை, ஜூன் 20: ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. நிலமற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் நிலம் வழங்கிட கோரியும், பல தலைமுறைகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி, குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரசார இயக்கம்
0
previous post