ஜெயங்கொண்டம், மே 31: மதுரையில் நடைபெற்ற 24வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு அருணன் தலைமை வகித்தார்.
இதில் செந்தொண்டர் அணி மாநில பொறுப்பாளர் பாலா, மாவட்ட செயலாளர் .இளங்கோவன், மாநிலக்குழு ஐவி.நாகராஜன் பங்கேற்று செந்தொண்டர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முன்னதாக ரவீந்திரன் வரவேற்றார். இதில் கட்சி மாவட்ட செயற்குழு துரைசாமி, பரமசிவம் ஆகியோர் பங்கேற்ற சிறப்புரையாற்றினர்.மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கு சான்றிதழ் வழங்கி அனைவரும் பாராட்டினர். அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் நன்றி கூறினார்.