திருவள்ளூர், செப். 2: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை வழங்க வேண்டும், அனைத்து பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தமிழ்அரசு தலைமை தாங்கினார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கீதா, எழிலரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், வட்ட குழு உறுப்பினர்கள் பூங்கோதை, உதயநிலா, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.