பெரம்பலூர்,ஆக.22: டெல்லி காவல் துறையை கண்டித்து பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுடெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான சுர்ஜித் பவனில், அரங்கிற்குள் நடைபெற்ற, கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று டெல்லி காவல் துறை அத்துமீறி நுழைந்து, அராஜகம் செய்துள்ளதை கண்டித்து, பெரம்பலூர் புது பஸ்டாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் நகரச் செயலாளர் சிவானந்தம் தலைமை வகித்தார்.
மார்க். கம்யூ.கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசி, ராஜேந்திரன், கோகுலகிருஷ்ணன், செல்லதுரை, ரெங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், சின்னப் பொண்ணு, மகேஸ்வரி, கிருஷ்ணசாமி செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை வட்டக் குழு உறுப்பினர் செங்கமலை, விவசாய தொழிலாளர் சங்க வட்ட பொருளாளர் செல்வராஜ், குன்னம் வட்டக்குழு உறுப் பினர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.