ஈரோடு, ஜூலை 22:சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சுப்பிரமணியன், நகர செயலாளர் சுந்தர்ராஜன், பொன் பாரதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.