தொண்டி,பிப்.27: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக மதரஸத்துல் அக்ஸா மக்தப் மதரஸா 3ம் ஆண்டு நிறைவு, பரிசளிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் முகவை அப்பாஸ் தலைமை, மாவட்ட தலைவர் ரஹ்மான் அலி, மாவட்டச் செயலாளர் அல்பார் அமீன், மாவட்ட பொருளாளர் முகமது ஆதில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்துர் ரஹ்மான் சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியமானது எது என்ற தலைப்பிலும் பேசினார். மங்களக்குடி கிளைச் செயலாளர் அஜ்மத் கான், பொருளாளர் அப்துர் ரஹ்மான், துணைத் தலைவர் பாதுஷா, துணைச் செயலாளர் சகுபர் அலி, வர்த்தக அணி செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் உமர் பாரூக், தொண்டரணி செயலாளர் தாஜ் முகமது மற்றும் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் எம்ஆர் பட்டினம் கிளை சார்பாக மாவட்ட தலைவர் ரஹ்மான் அலி தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் அபுதாகிர் கிளைத் தலைவர் பாசித் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அத் தவ்ஹீத் மதரஸா மாணவ,மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி இளைஞர்களின் வழிகேட்டிற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களா சமூகமா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் அப்துர் ரஹ்மான் மார்க்க கல்வியே மகத்தானது என்ற தலைப்பிலும் பேசினர். இறுதியாக கிளை துணை செயலாளர் அஸ்லம் நன்றி கூறினார்.