சாயல்குடி, செப்.1:கடலாடி இந்திரா நகர் 2ல் அமைந்துள்ள சந்தனமாரியம்மன், கருப்பணசாமி கோயில் ஆவணி மாத 26ம் ஆண்டு வருடாந்திர உற்சவ விழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நாள்தோறும் அம்மன் மற்றும் கருப்பணுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. உலக நன்மை வேண்டி புதன் கிழமை திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் சந்தன மாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடமும், மாலையில் அக்னிச்சட்டி எடுத்து கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் கூடிய தீபாராதனை நடந்தது. இரவில் கடலாடியின் அனைத்து சமுதாய மக்கள் வழிபாடு நடந்தது. நேற்று காலையில் கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரியை பெண்கள் சுமந்து ஊர்வலமாக வந்து கடலாடி கண்மாயில் கரைத்தனர்.
மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
previous post