போச்சம்பள்ளி, ஆக.29: போச்சம்பள்ளி அருகில் உள்ள அயலம்பட்டியில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடைபெற்றது. பம்பை, தாரை, தப்பட்டையுடன் கரகம் ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண்கள் கூழ் எடுத்து சென்று அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர். இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா
previous post