வேப்பனஹள்ளி, பிப்.16: வேப்பனஹள்ளி அருகே இனாம் குட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(32), விவசாயி. இவரது மனைவி சாந்தம்மா. கடந்த 13ம் தேதி இரவு, வேப்பனஹள்ளில் உள்ள ஒருவரிடம் சீட்டு பணம் கொடுத்து விட்டு வருவதாக சாந்தம்மாவிடம் கூறிவிட்டு சிவக்குமார் வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், சிவக்குமார் கிடைக்கவில்லை. இந்தநிலையில், அவரது வீட்டில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ராமச்சந்திரம் எரிக்கரை அருகே சிவக்குமார் சென்ற டூவீலர் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற குடும்பத்தினர் அங்கு அவரை தேடினர். பின்னர் இதுபற்றி வேப்பனஹள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடம் வந்த போலீசார், டூவீலரை மீட்டு விசாரித்தனர். ஏரி பக்கமாக சென்றபோது, உள்ளே தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கருதி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
மாயமான விவசாயியை தேடும் பணி தீவிரம்
0
previous post