பெரம்பலூர்,ஆக.28: பெரம்பலூரில் மாயமான பள்ளி சிறுமியை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா நேரில் அழைத்துப் பாராட்டு தெரி வித்தார். கடந்த 21ம்தேதி பெரம்ப லூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பெரம்பலூ ரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளிக்கும் செல்லாமல்,வீடும் திரும் பாததால் மகளைக் காண வில்லையென போனதாக பெற்றோர் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இந்தப் புகாரி னைப் பெற்று வழக்குப் பதிவுசெய்த போலீசார், புதுபஸ்டாண்டுவரைவந்து, சிறுமி மாயமானதால் அந்தப் பகுதியிலுள்ள சிசி டிவி கேமரா பதிவுகளைக் கொண்டுகாணாமல்போன சிறுமியைத் தேடிவந்தனர்.
விசாரணையின் பேரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இச்சிறுமியை கண்டால் தகவல் தெரிவிக்கவும் என்று காவல்துறையினர் கூறிவந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில், பெரம்பலூர் உட் கோட்ட டிஎஸ்பி ஆரோக்கிய ராஜ் மேற்பார்வையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 24ம்தேதி திருப்பெயர் கிரா மத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கிருஷ்ணக்குமார்(38) என்பவர் பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் நின்று கொண்டிருந்த அந் தச்சிறுமியை கண்டறிந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். போலீசார் தேடிக் கொண் டிருந்த சிறுமியை கண்டு பிடித்து போலீசாரிடம் ஒப்ப டை த்த ஆட்டோ டிரைவரை நேற்று(27ம் தேதி) பெரம் பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா நேரில் அழைத்து தனது பாராட்டு களை தெரிவித்து அவருக்கு வெகுமதி அளித்தார்