திருப்போரூர். மாம்பாக்கம் ஊராட்சியில் குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள முருகநாதீஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த குளத்தில் கழிவுப்பொருட்கள் சேர்ந்து குளம் மாசடைந்தது.
இதையடுத்து மாம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் குளத்தை தூர் வாருதல், குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளபட்டு குள் சுத்தம் செய்யப்பட்டது. இதில், மாம்பாக்கம் தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் லோகேஸ்வரி விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள் இப்பணி தொடக்க விழாவில் பங்கேற்றனர்.