தியாகதுருகம், ஜூன் 19: தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் பச்சமுத்து (24). இவருக்கும், வடபூண்டி கிராமத்தை சேர்ந்த செல்லம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பச்சமுத்து அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சண்டையால் செல்லம் கோபித்துக்கொண்டு வடபூண்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று பச்சமுத்து மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி அங்கிருந்த மாமியார் சுகந்தி (40) என்பவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் சண்டையின்போது சுகந்தி கழுத்தில் இருந்த 4 பவுன் செயின், அவரது இளைய மகள் சுமித்ரா கழுத்தில் இருந்த 1 பவுன் செயின் தொலைந்து போனதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் பச்சமுத்து மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மாமியாரை தாக்கிய மருமகன் கைது
0
previous post