தூத்துக்குடி, நவ. 9: தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் வழங்கினார். 8வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத பிரிவு சார்பில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் அனைவருக்கும் ஆயுர்வேதம் என்ற தலைப்பில் ஆயுர்வேதம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வழங்கினார். இதில் ஊராட்சி செயலர் ஜெயக்குமார், மருந்தாளுநர் வள்ளி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.