மானூர், ஆக. 3: மானூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் இசக்கியப்பன், தாசில்தார் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பிடிஓக்கள் உமா, ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய துணைத்தலைவர் கலைச்செல்வி, ஊராட்சி தலைவர்கள் சண்முகத்தாய், அள்ளித்துரை, சந்திராபெருமாள்சாமி, வெள்ளப்பாண்டி, சுப்பிரமணியன், ஷர்மிளாமுகேஷ், ஒன்றிய கவுண்சிலர்கள், முத்துப்பாண்டி, சுதாராணி பால், முருகராஜ், மல்லிகாமுருகன், உமாதேவி ஸ்டாலின், திமுக பிரதிநிதிகள் வின்சென்ட அரிசந்திரன், முகமது அலி மற்றும் மானூர் ஒன்றியத்துக்குட்பட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.