மானூர்,ஜூன் 6: மானூர் அருகே சட்ட விரோதமாக கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். நெல்ைல மாவட்டம் மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எட்டாங்குளம் ஊருக்கு அருகில் சட்ட விரோதமாக கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் தடை செய்யப்பட்ட ‘கள்’ விற்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடமிருந்து ஒரு லிட்டர் கள் மற்றும் ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மானூர் அருகே கள் விற்றவர் கைது
0