பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூர் மாவட்டத்தில் மாடி தோட்ட தொகுப்புகள் மானியத்தில் விழிப்புணர்வு பயிற்சியுடன் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தி ற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் – 2023-24 ம் நிதியாண்டில் மாடித் தோட்டத் தளைகள் விநி யோகம் இனத்தின் கீழ் 200 மாடித்தோட்டத் தொகுப்பு கள் மானியத்தில் வழங்கப் பட உள்ளது. செடி வளர்ப்பு பைகள், தென்னை நார் கழிவுக் கட்டிகள், ஆறு வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரை க்கோடெர்மா விரிடி, வேப் பெண்ணெய் மற்றும் காய் கறி வளர்ப்பு கையேடு ஆகி யவை அடங்கிய தொகுப்பு 50சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள் ளன. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.900 என நிர்ணயி க்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகளை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தி்ட்டத்தை திறன்பட செயல்படுத்திட பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உத வி இயக்குநர் அலுவலகத் தில் வருகிற 24ம் தேதியன்று மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயி ற்சி நடத்தப்பட உள்ளன. ஆர்வம் உள்ள பயனாளிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தில் பய னடைய விரும்பும் பயனா ளிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக் குநர் அலுவலகத்தை அணு கியோ அல்லது http://www. tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணை யதளத்தில் பதிவு செய்தோ பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.